Saturday, April 12, 2014

தொகைச்சொற்கள்

தொகைச்சொற்கள்

*இருமை*

1. இம்மை
2. மறுமை

*இருசுடர்*

1. ஞாயிறு
2. திங்கள்

*ஈரெச்சம்*

1. வினையெச்சம்
2. பெயரெச்சம்

*இருவினை*

1. நல்வினை
2. தீவினை

*இருதிணை*

1. உயர்திணை
2. அஃறிணை

*மூவிடம்*

1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை

*முந்நீர்*

1. ஆற்றுநீர்
2. ஊற்றுநீர்
3. மழைநீர்

*முப்பால்*

1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. காமத்துப்பால்

*முத்தமிழ்*

1. இயற்றமிழ்
2. இசைத்தமிழ்
3. நாடகத்தமிழ்

*மூவேந்தர்*

1. சேரன்
2. சோழன்
3. பாண்டியன்

*முக்கனி*

1. மா
2. பலா
3. வாழை

*நான்மறை*

1. ரிக்
2. யசூர்
3. சாம
4. அதர்வணம்

*நாற்குணம்*

1. அச்சம்
2. மடம்
3. நாணம்
4. பயிர்ப்பு

*நாற்படை*

1. தேர்
2. யானை
3. குதிரை
4. காலாள்

*நாற்றிசை*

1. கிழக்கு
2. மேற்கு
3. தெற்கு
4. வடக்கு

*நாற்பால்*

1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்

*ஐம்பால்*

1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
4. ஒன்றன்பால்
5. பலவின்பால்

*ஐந்தொகை*

1. முதல்
2. வரவு
3. செலவு
4. இருப்பு
5. ஆதாயம்

*ஐவகை இலக்கணம்*

1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

*ஐவகை பாக்கள்*

1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
5. மருட்பா

*ஐம்பெருங்காப்பியங்கள்*

1. சீவகசிந்தாமணி
2. சிலப்பதிகாரம்
3. மணிமேகலை
4. வளையாபதி
5. குண்டலகேசி

*ஐஞ்சிறு காப்பியங்கள்*

1. நாககுமார காப்பியம்
2. உதயணகுமார காவியம்
3. யசோதர காவியம்
4. சூளாமணி
5. நீலகேசி

*ஐம்புலன்*

1. ஊறு
2. சுவை
3. ஒளி
4. நாற்றம்
5. ஓசை

*ஐம்பொறிகள்*

1. மெய்
2. வாய்
3. மூக்கு
4. கண்
5. செவி

*அறுசுவை*

1. இனிப்பு
2. கசப்பு
3. புளிப்பு
4. உவர்ப்பு
5. துவர்ப்பு
6. கார்ப்பு

*எண்சுவை*

1. நகை
2. அழுகை
3. இளிவரல்
4. மருட்கை
5. அச்சம்
6. பெருமிதம்
7. வெகுளி
8. உவகை

*பன்னிரெண்டு இராசிகள்*

1.மேஷம்
7.துலாம்2.ரிஷபம்8.விருச்சிகம்3.மிதுனம்9.தனுசு4.கடகம்10.மகரம்5.சிம்மம்
11.கும்பம்6.கன்னி12.மீனம்

*புறத்திணை*

1. வெட்சி
2. கரந்தை
3. வஞ்சி
4. காஞ்சி
5. உழிஞை
6. நொச்சி
7. தும்பை
8. வாகை
9. பாடாண்
10. பொதுவியல்
11. கைக்கிளை
12. பெருந்திணை

*பருவ மங்கை எழுவர்*

1. பேதை
2. பெதும்பை
3. மங்கை
4. மடந்தை
5. அரிவை
6. தெரிவை
7. பேரிளம்பெண்

*கடையேழு வள்ளல்கள்*

1. பாரி
2. ஆய் அண்டிரன்
3. எழினி
4. நள்ளி
5. மலையன்
6. பேகன்
7. காரி

*மலரின் எழுவகை*

1. அரும்பு
2. மொட்டு
3. முகை
4. மலர்
5. அலர்
6. வீ
7. செம்மல்

*நவரத்தினங்கள்*

1. கோமேதகம்
2. நீலம்
3. பவளம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைரம்
9. வைடூரியம்

No comments:

Post a Comment