Saturday, April 12, 2014

வரலாற்றுக்கு முந்திய காலம்:

வரலாற்றுக்கு முந்திய காலம்:
*வரலாற்றுக்கு முந்திய காலத்தை பழைய கற்காலம்,புதிய கற்காலம் மற்றும் உலோகக் காலம் எனப் பிரிக்கலாம்.
*பழைய கற்காலம் பேலியோலிதிக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
*புதிய கற்காலம் நியோலிதிக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
*இந்தியாவில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள்:
1.வட மேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி.
2.வட இந்தியாவில் சிவாலிக் குன்றுகள்.
3.மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா.
4..நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று.
5.ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்.
6.சென்னைக்கருகிலுள்ள அத்திரம்பாக்கம்.
*பழைய கற்காலம் என்பது கி.மு.10000 ஆண்டுக்கு முற்பட்ட்தாகும்.
*பழைய கற்கால மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தான்.
*பழைய கற்கால மக்கள் குவார்சைட் எனப்படும் கற்களைக் கொண்டு வைட்டையாடினர்.
*ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் பழைய கற்கால கருவிகளை சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் முதன்முதலில் கண்டறிந்தார்.
*காஞ்சிபுரம்,வேலூர்,திருவள்ளுவர் மாவட்டங்களிலும் பழைய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
*சென்னையை அடுத்துள்ள கொற்றலையாற்றின் சமவெளியிலும்,வட மதுரையிலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கிடைத்துள்ளன.
*பிம்பேட்காவில் பழைய கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன.
*இடைக்கற்காலம் கி.மு.10000 முதல் கி.மு.6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும்.
*இடைக்கற்கால இடங்கள்:குஜராத்தில் லாங்கன்ச்,மத்தியப் பிரதேசத்தில் ஆதம்கார்,ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்,பீகார்.
*புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.4000 ஆண்டுக்கு இடைப்பட்ட்தாகும்.*புதிய கற்கால பகுதிகள்:காஷ்மீர் பள்ளத்தாக்கு,பீகாரில் சிராண்ட்,உத்திரப்பிரதேசத்தில் பீலான் சமவெளி,தக்காணத்தில் பல இடங்கள்,கர்நாடகத்தில் மாஸ்கி,பிரம்மகிரி,ஹல்லூர்,கோடேகல்,தமிழ்நாட்டில் பையம்பள்ளி,ஆந்திராவில் உட்னூர்.
*புதிய கற்காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
*புதிய கற்காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்யும் முறை காணப்பட்டது.
*மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு.
*தமிழ்நாட்டில் பையம்பள்ளியில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகியவற்றிலான பொருட்கள் கிடைத்துள்ளன.
*தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கல் காலமும் (மெகாலிதிக்
) சமகாலமாகக் கருதப்படுகிறது.
*பெருங்கல் என்ற சொல்லுக்கு நீத்தார் நினைவுச் சின்னம் என்பது பொருள்.
*சென்னையை அடுத்துள்ள பெரும்புதூர் என்ற இடத்தில் கற்கருவிகளுடன் இரும்பினால் ஆன கருவிகளும் கிடைத்துள்ளன.
*தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் இரும்பு காலம் என அழைக்கப்படுகிறது.
*செம்பு காலம் கி.மு.3000 முதல் கி,மு.1500 வரை ஆகும்.
*இரும்பு காலம் கி.மு.1500 முதல் கி.மு.600 வரை ஆகும்.
*நீத்தார் நினைவுச் சின்னங்கள் காணப்படும் இடங்கள்:காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,கடலூர்,திருச்சி,புதுக்கோட்டை.
*திருநெல்வேலி ஆதிச்சநல்லூரில் மண்தாழிகள் கிடைத்துள்ளன.
*ஆதிச்சநல்லூரில் வெண்கலச் சாமான்களும் வாய்ப்பூட்டு அலகுகளும் கிடைத்துள்ளன.
ஹரப்பா பண்பாடு
*கி.பி.1921-ஆம் ஆண்டு முதன்முதலில் ஹரப்பா கண்டறியப்பட்டதால் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
*பாகிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிந்து நதியின் உபநதியான ராவி நதிக்கரையில் ஹரப்பா அமைந்துள்ளது.
*கி.பி.1922-ல் சர் ஜான் மார்சல் என்பவரால் மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
*மொகஞ்சதாரோ பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
*ஹரப்பா பண்பாடு சால்கோலித்திக் காலம் அல்லது செம்பு கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோகக்காலத்தைச் சார்ந்தது.
*இக்காலத்தில் தகரத்தையும்,தாமிரத்தையும் இணைத்து வெண்கலம் உருவாக்கப்பட்ட்து.
*சிந்துசமவெளி மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
*சிந்துசமவெளி மக்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை.
*சர் ஜான் மார்சலின் கருத்துப்படி சிந்துசமவெளி நாகரிக காலம்-கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை.
*சிந்துசமவெளி நாகரிக பகுதிகள்:சிந்து,குஜராத்,ஹரியானாவை உள்ளடக்கிய பிரிக்கப்படாத பஞ்சாப்,ஜம்மு.உத்திரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி,இராஜஸ்தானத்தின் வடபகுதி.
*சிந்து சமவெளி மக்கள் சுமேரியா,பாபிலோனியா,எகிப்து போன்ற நாடுகளுடன் கடல்கடந்து வாணிகம் செய்தனர்.
*ஹரப்பாவிற்கும்,மொகஞ்சதாரோவிற்கும் இடையில் 600கி.மீ. இடைவெளி உள்ளது.
*பேர்சர்வ்ஸ் என்பவரின் கூற்றுப்படி சிந்துசமவெளி காலம்-கி.மு.2000 முதல் கி.மு.1500 வரை.
*டி.பி.அகர்வாலின் கூற்றுப்படி சிந்துசமவெளி நாகரிக காலம்-கி.மு.2000 முதல் கி.மு.1750 வரை.

No comments:

Post a Comment