Saturday, April 12, 2014

ஜனவரி 2014 நடப்பு நிகழ்வுகள்

ஜனவரி 2014 நடப்பு நிகழ்வுகள்

சனவரி 1: 
செக் குடியரசில் பாலத்தீனத் தூதுவர் ஜமால் அல் ஜமால் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

சனவரி 2
ரீயூனியன் தீவை சூறாவளி பெஜிசா தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.
அண்டார்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் சிக்கிய அக்காதெமிக் சொக்கால்ஸ்கி என்ற உருசிய சுற்றுலா, ஆய்வுக் கப்பல் பயணிகள் 52 பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.
2014ஏஏ என்ற 5-மீட்டர் விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியது. புவி வளிமண்டலத்திலேயே இது எரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

சனவரி 3:
• ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியைப் பெரும் பனிச் சூறாவளி தாக்கியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 13 பேர் கொல்லப்பட்டனர்.
• சர்ச்சைக்குரிய திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது

சனவரி 4:
தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் குடி¬வ¬ரவு, குடி¬ய¬கல்வு அதி¬கா¬ரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்ததை அடுத்து தனது பயணத்தை இடைநிறுத்தி இந்தியா சென்றார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில் 5-மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

சனவரி 5:
ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசசு கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது.
இந்தியாவின் ஜிசாட்-14 எனும் தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை ஜி. எஸ். எல். வி டி5 ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இலங்கையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து முல்லைத்தீவு, பருத்தித்துறைக் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சனவரி 8:
இந்தியாவில் மும்பையில் இருந்து புறப்பட்ட தொடருந்து ஒன்று தீப்பற்றியதிஉல் ஒன்பது பயணிகள் உயிரிழந்தனர்.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவின் லிட்டில் ஐ லேப்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது.

சனவரி 9:
சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் ஹமா மாகாணத்தில் வாகனக் குண்டு ஒன்று வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியாவில் சினாபுங் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது.
கியூபா தலைநகர் அவானாவில் இருந்து 112 மைல் கிழக்கே புளோரிடா நீரிணையில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

சனவரி 10:
விசா மோசடி தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோபர்கடே அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டு பதியப்பட்டு நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார்.

சனவரி 11:
திபெத்தின் பழம்பெரும் டுக்கெசோங் நகரின் ஒரு பகுதி தீயினால் அழிந்தது. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்தன.
குறு ஒளிர்வண்டம் ஒன்றில் பால் வழியின் நடுவில் கருந்துளை ஒன்று விண்மீன் ஒன்றை விழுங்கியது முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியில் அமர்ந்தார்.
ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் உயிரிழந்தார்.

சனவரி 13:
போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2013 ஃபீஃபா தங்கப் பந்தை வென்றார்.
சீனா வூ-14 எனப்படும் மீயுயர்வேக ஏவுகணையை சோதித்தது. இதன் அதியுயர் வேகம் மாக் 8 முதல் 12 ஆகும்.
திரைப்பட நடிகை, அஞ்சலி தேவி காலமானார்.

சனவரி 15:
இந்தியக் கோயில் ஒன்றில் திருடப்பட்ட 11ம், -12ம் நூற்றாண்டு சிற்பங்களை ஐக்கிய அமெரிக்கா [இந்தியா]]விடம் திரும்ப ஒப்படைக்கவிருக்கிறது.
ஒருபால் திருமணம் புரிவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் நைஜீரியாவில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய பாதுகாப்பு முகவர் நிலயன் கணினிகளை நோட்டமிட வானொலி அலைகளைப் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனவரி 17:
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ஜப்பானியர்களில் கடைசியாக சரணடைந்தவர்களில் ஒருவர் ஹிரூ ஒனோடா (1974 இல் பிலிப்பீன்சில் சரணடைந்தார்) 91வது வயதில் காலமானார்.

சனவரி 19:
செவ்வாய்க் கோளில் தானியங்கள் பயிரிட முடியும் என அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது

சனவரி 21:
இந்தியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்து விட்டதாகக் கூறி, 15 பேரின் மரணதண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது

சனவரி 22:
தென்னாப்பிரிக்காவில் மிக அரிதான நீல வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
புவி சூடாதல் தொடர்வதாக நாசா, மற்றும் தேசிய கடல், வளிமண்டல நிருவாக மையம் அறிவித்துள்ளன.

சனவரி 23:
எஸ்என் 2014ஜே என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பு மெசியர் 82 என்ற விண்மீன் பேரடையில் கண்டுபிடிக்கப்பட்டது

சனவரி 26 :
2014 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் நடாலை வென்றார்.

சனவரி 28:
நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உக்ரைன் பிரதமர் மிக்கொலா அசாரொவ் தனது பதவி விலகல் கடிதத்தை அரசுத்தலைவரிடம் கையளித்தார்.

சனவரி 29:
எட்வேர்ட் சுனோவ்டன் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
சாதாரண கலங்களை குருத்தணுவாக மாற்றும் முயற்சியில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

சனவரி 30:
இந்தியாவிற்குள் ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேசத்தின் ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மொதியுர் ரகுமான் நிசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment