Saturday, April 12, 2014

பழைய கற்காலம்

பழைய கற்காலம் (கி.மு.10000 ஆண்டுகளுக்கு முற்பட்டது)

· நாடோடிகளாக வாழ்ந்தனர்
· உணவு சேகரிப்போர் என்று அழைக்கின்றனர்.
· குவார்ட்சைட் என்ற ஒரு வகை கற்களைப் பயன்படுத்தினர்.
· நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இடைக்கற்காலம் (கி.மு. 10,000 முதல் கி.மு.6,000)

· வில், அம்பை வேட்டைக்கு பயன்படுத்தினர்.
· நுண்கருவி (மைக்ரோலித்திக்) பயன்படுத்தினர்.

புதிய கற்காலம் (கி.மு 6,000 முதல் கி.மு. 4,000)

· வேளாண்மையில் ஈடுபட்டனர்.
· சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
· இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெரிய மட்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன.
· பருத்தி,கம்பெளி போன்ற ஆடைகளை உபயோகித்தனர்.

உலோகக் காலம்

· செம்புக்காலம்
· வெண்கலக்காலம்
· இரும்புக் காலம்

சிந்து சமவெளி நாகரிகம்

· காலம் கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை —சர் ஜான் மார்ஷல்
· சால்கொலித்திக் காலம் அல்லது செம்புக் காலத்தைச் சேர்ந்தது.
· சமய வழிபாட்டின் சின்னம் –அரசமரம்.
· பசுபதி என்ற சிவனையும், பெண்கடவுளையும் வணங்கினர்.
· கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாக கருதப்பட்டன.
· டெரகோட்டா என்னும் மட்பாண்டத்தொழில் மக்களின் முக்கியத்தொழிலாகத் திகழ்ந்தது.
· நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது.
· இரும்பின் பயன் பற்றி தெரியவில்லை

ஏற்றுமதி செய்த பொருட்கள்

கோதுமை, பார்லி, பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தியாடைகள், மட்பாண்டங்கள், மணிகள், சுடுமண் கலைப் பொருட்கள், தந்த வேலைப்பாடுகள்.

இறக்குமதி செய்த பொருட்கள்

தங்கம் செம்பு ஈயம், அரிய வகைக் கற்கள்.

ஹரப்பா நாகரிகம்

· 1921 ல் தயாரம் சஹானி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
· பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் மாண்ட்காரி மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
· 6 தானியக் களஞ்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
· மரத்தாலான சவப்பெட்டி கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
· ஹரப்பா பண்பாடு செம்பு கற்காலத்தை சேர்ந்தது.
· தமிழ்நாட்டிலுள்ள பையம் பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் போன்றவை கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மொஹஞ்சதாரோ நாகரிகம்

· 1922 ல் R.D பானைஜி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
· பாகிஸ்தானின் சிந்து மாஹாணத்தில் லர்கான மாவட்டத்தில் சிந்து நதியின் வலது கரையில் அமைந்துள்ளது.
· இறந்த்தவர்களின் மேடு என்று அழைக்கப்படுகிறது.
· பெரிய நீச்சல் குளம், தானியக் களஞ்சியம் காணப்படுகிறது.
· நாட்டிய மங்கை என்ற வெண்கல சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
· சிந்து சமவெளி நகரங்களில் பெரியது.
· நகர அமைப்பு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Ø கோட்டை மற்றும் சிட்டாடல்
Ø .தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள நகரம்
Ø .ஊருக்கு வெளியே அமைந்துள்ள சிறிய குடிசைகள்

லோத்தல்

· குஜராத் மாநிலத்தில் பாக்குவார் நதிக்கரையில் அமைந்துள்ளது.
· தொழில் மற்றும் வாணிப துறைமுகம்.
· அரிசி முதன்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
· குதிரையின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment